விவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா?

0
160
விவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா

மருத்துவத்துறையில் ஏழு மருத்துவ தியரிகள் உண்மையான என்பது குறித்து மிகுந்த விவாதங்களுக்கு உரியதாக இருந்தன.

1. காற்றின் மாசு (Air Pollution) நுரையீரல் புற்றுநோய்க்கு காரணம்.

1939 முதல் மருத்துவ விஞ்ஞானிகள் நிறையப்பேர் இது பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தார்கள். காற்றின் மாசு பாதிப்பு என்பது பல படித்தான காரணிகளை கொண்டது.21 வருடங்கள் கழித்து அதை ஒத்துக்கொண்டனர்.

2. பாக்டீரியா அல்சர் பாதிப்புக்கு காரணம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்கர்கள் ராஃபின் வாரெண் மற்றும் பேரி மார்ஸல் இவர்கள் கூற்றுப்படி “ஹெலிகோபாக்டர் ஃபைலோரி” எனும் பாக்டீரியா அல்சர் பாதிப்பிற்கு காரணம் என சொன்னார்கள்(1982). இதற்கு மன அழுத்தமும் உணவு முறை பழக்கங்களும் காரணம் எனச் சொல்லப்பட்டு வந்தது. 1990 ல்தான் அமெரிக்கன் இன்ஸ்டிடியுட் அப் ஹெல்த் இதைஉறுதிப்படுத்தியது.

3. ஆஸ்பிரின் மருந்து ஹார்ட் அட்டாக் ஆபத்தை குறைக்கிறது.

லாரன்ஸ் க்ரேவன், இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தமது முதல் ஆய்வரிக்கையில் ஆஸ்பிரின் இருதயம் சம்பந்தமான ரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக 1950 ல் தெரிவித்தார். அதன் பின் 40 ஆண்டுகள் கழித்துதான் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆஸ்ப்ரின் மருந்து ஒருவருக்கு இருதய நோய்களில் பாதுகாப்பளிக்கிறது.

4. எக்ஸ்-ரே உடலுக்கு கெடுதி

1911 ல் நடத்தப் பட்ட ஆய்வில் அதிக எக்ஸ்ரேக்கல் லுக்கிமியா மற்றும் இதர கேன்சர் நோய்களுக்கு காரணம் என்றார்கள். 1956 ல் தான் அமெரிக்கன் சயன்ஸ் அகாடமி தந்த ரிப்போர் படி இஷ்டத்துக்கு எக்ஸ்-ரே எடுக்க கூடாது என அறிவுருத்தப்பட்டது.

5. மாங்கனீஸ் மனித மூளைக்கு கெடுதி

மாங்கனீஸின் அதிக அளவு அதிகரிப்பு பார்கின்ஸன் நோய்களுக்கு காரணம். நியாபக மறதி mental disordersமற்றும் மூளை அயர்ச்சி , tremors, தூக்க மயக்கம்(lethargy) அதோடு கூட மூளைச் சாவிற்கும் காரணம்.

6. கிட்டப் பார்வை (Myopia is a sign of intelligence)க்கும் அறிவு முதிர்ச்சிக்கும் சம்பந்தம்

ஹாங்காங் பல்கலைகழக முடிவுப் படி ஒருவரின் கிட்டப் பார்வைக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் மரபணு பரிமாற்றம் காரணம்.

7. அதிக வெயில் நாட்கள் வயலென்ஸ் க்கு ஒரு காரணம்.

இஸ்ரேலை சேர்ந்த பென் கூரியன் யுனிவர்சிட்டியின் ஆராய்சியாளர்கள் கூற்றுப்படி, வெயில் காலங்களில் உடலில் செரோடோனின் அளவு மாற்றம் ஏற்படுவதாக சொன்னார்கள். அந்த கால கட்டங்களில் 2 – 3 மடங்கு அதிகமாக குற்றங்கள் அதிகரிக்கிறது.

by Kalakumaran