பாடங்களை கற்றுத் தந்த காலங்கள்

0
96
winding-path

பாடங்களை கற்றுத் தந்த காலங்கள், அனுபவங்களை பெற்றுத் தந்த நேரங்கள், பொறுமையை உணர்த்திய நிமிடங்கள், தனிமையுடன் சென்ற வினாடிகள் என்று நான் சென்ற பயணங்கள்.

நான் சென்ற வழி அதனால் எனக்கு ஏற்பட்டதோ வலி என்ற நொடி சோகங்களும், துன்பங்களும் என்னை நண்பனாக ஆக்கிக்கொண்ட நேரம் பல கஷ்டங்கள் என் மீது இஷ்டங்களாக மாறியது !

மேடு, பள்ளங்கள் அற்ற பாதையினுடாக என் பயணங்களை மேற்கொள்ள விரும்பினேன் ஆனால் மேடு, பள்ளங்கள் அதிகமாக காணப்படும் பாதையில் பயணித்தேன்.

பணம் என்றால் பலர் பக்கத்தில் வருகின்றனர் ஆனால் அதை பணம் இல்லை என்றால் பக்கத்தில் அமர்வதை கூட தவிர்த்து விடுகின்றனர் இது தான் உலக வாழ்க்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

Hameed