நோயாளியின் தொண்டையில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் உயர் தொழில்நுட்ப ரோபோ

0
185
robo-operation

நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் பாம்பு போன்ற ரோபா நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃப்ளெக்ஸ் ரோபாடிக் அமைப்பு தடைகளை தவிர்க்கவும் மற்றும் உடற்கூறியலில் நேர் அல்லாத பகுதிகளில் செல்லவும் அனுமதிக்கிறது. மேலும் இதில் ஒரு உயர் வரையறை கேமரா மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஜாய்ஸ்டிக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி இயந்திரம் ஜாய்ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தி, மனிதனின் வாய் வழியாக நுழைந்து, தொண்டையில் இறங்கி நுழைய முடியாத மிகவும் கடினமான பகுதிகளில் நுழைந்து செயல்படுத்தவும் முடியும். இந்த ரோபோ கருவியில் லைட் மற்றும் கேமரா உள்ளதால் திரையில் தொண்டையில் நுழைந்து செல்லும் பகுதியை பார்த்துக்கொண்டே, சரியான இடத்திற்கு செல்லும் வரை இயக்கலாம்.