செவ்வாயில் தனிமை வாழ்வு முன்னோட்டம், NASA ஆரம்பம்.

0
148
nasa

NASA, Mars one திட்டத்தை அறிவித்ததில் இருந்து அதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

அதன் ஒரு அங்கமாக Mission isolation எனும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் வாழும் போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மூவரும் பிரெஞ்சுக்காரர் ஒருவரும் ஜேர்மனியர் ஒருவரும் இத்திட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 36 அடி பரப்பளவுடைய ஒரு குறித்த கூடாரத்தினுள் இவர்கள் ஒரு வருடம் தங்க உள்ளனர். ஹாவாய் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இவ் இடம் செவ்வாயின் சூழலைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மா மற்றும் மாத்திரைகள் ஆக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டு இவர்கள் வாழ உள்ளனர்.