கம்பஹ மாவட்டத்தில் தப்லீக் இயக்கம் கம்மல்துறையில்தான் முதலில் அறிமுகம்!

0
891
negombo-beach-hote

கம்பஹ மாவட்டத்துக்கு தப்லீக் இயக்கம் முதன் முதலில்அறிமுகப்படுத்தப்பட்டது கம்மல்துறையில்தான் என்ற தகவல் அனேகருக்குத்தெரியாத விடயமாகும். எனவே அதனை இங்கு பதிய விரும்புகிறேன்.

அறிஞர் யூ.எம். தாஸின் (அல்-அஸ்ஹரி) அவர்களின் மூத்த சகோதரர்களுள் ஒருவரானயூ.எம். அப்துர்ரஹ்மான் அவர்களைத் தலைவராகவும் மௌலவி அல்ஹாஜ் எம்.ஜே.எம்.றியாழ் (கபூரி) அவர்களை செயலாளாராகவும் கொண்டு கம்மல்துறையில் 1950 ஆம்ஆண்டளவில் தொடங்கிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம| 1955 ஆம் ஆண்டில்கம்மல்துறையில் தப்லீக் இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் பின்னர்தான் நீர்கொழும்பிலும் கம்பஹ மாவட்டத்தில் உள்ள ஏனைய முஸ்லிம்கிராமங்களிலும் தப்லீக் இயக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

கம்பஹ மாவட்டத்தின் இந்த முதலாவது இஜ்திமா தப்லீக் கூட்டம் என்ற பெயரில் 31.12.1955 இல் ஆரம்பமாகி 01.01.56 வரையில் இரு தினங்கள் நடைபெற்றது.

இந்தியாவில் இருந்தும் கொழும்பில் இருந்தும் வந்த தப்லீக் ஜமாஅத்தினர் 31 ஆம் திகதி சனிக்கிழமை பின்னேரம் கம்மல்துறைப் பள்ளிவசலை வந்தடைந்தனர்.அன்றைய தினம் மஃரிபுத் தொழுகைக்குப் பின்னர் பயான் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த இஜ்திமாவில்:-

  1. மௌலவி பீ.கே.எம். அப்துல் காதிர் (அப்ஸலுல் உலமா)
  2. மௌலானா செய்யது கோயா தங்கள்
  3. அல்ஹாஜ் எஸ்.எச். இஸ்மாயில் (பிரதி சபாநாயகர்)
  4. மௌலவி எம். அலவி அபுல் ஹஸன் (எம்.ஏ), (அல் அஸ்ஹரி)
  5. மௌலவி என்.டி. அப்துர்ரஸாக் (ஜமாலி)
  6. அல்ஹாஜ் எம். ஷேக் இப்றாஹீம்
  7. மௌலவி எம்.பி.அப்துல் காதிர் மௌலானா

ஆகியோர் உரை நிகழ்த்தினர்

கம்மல்துறையில் மின்சார வசதிகள் இல்லாத அக்காலத்தில் ஒலிபெருக்கி வசதிகள்செய்யப்பட்டதோடு பெண்களுக்கான பிரத்தியேக இட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

எம்.ஜே.எம். தாஜுதீன் வலைப்பதிவு