இரத்தப்புற்று நோயாளிக்கு எவ்வாறு நாம் உதவலாம்? + உதவும் தொடுப்புக்கள்

0
214
blood-cancer-tamil

அதிகரித்துவருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இரத்தப்புற்று நோயால் பாதிப்புற்று stems cells (தண்டு கலங்கள்) இக்காக காத்திருக்கும் வித்தியாவின் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது. எனினும் பல பகிர்வுகள் வெறும் உணர்வை மையப்படுத்தியதாக இருப்பதனால் இவ் நோய் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் போதியளவுக்கு இல்லாமல் இருக்கிறது.
இவ்வாறான பகிர்வுகள் சில காலங்களுடன் முற்றுப்பெறுவது வழமை. ஆனால், இரத்தப்புற்று நோய் என்பது இப்போதைக்கு முற்றுப்பெற போவதில்லை. எனவே, வித்தியாவைப்போல் பாதிப்புக்குள்ளான உள்ளாகப்போகும் ஏனையவர்களின் நன்மை கருதி, என்னால் முடிந்தவரை சில விளக்கங்களுடன் இப்பதிவு அமையும்.

இரத்தப்புற்று நோய் (blood cancer / leukemia) என்றால் என்ன?

இரத்தப்பபற்றுநோய் அல்லது லுகேமியா, இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய்.
நவீன ஆய்வு வரைவிளக்கணப்படி, லுகேமியா பல்வேறு நோய்களை ஒன்றடக்கிய ஒரு வியாதியாகும். இந் நோய் ஏற்பட பொதுவான காரணி எலும்பு மச்சையில் (bone marrow) உள்ள ஸ்டெம் செல்கள் என அறியப்படும் தண்டு உயிரணுக்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெள்ளை அணுக்களின் அபரிமித வளர்ச்சியால் ஏற்படும் கோளாறுகளாகும்.
அதாவது, உடல் இரத்த‌தில் இருக்கவேண்டிய வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் இருப்பதனாலும் அத்தோடு முதிராத குறைபாடுள்ள வெள்ளை அணுக்கள் அதிகளவில் இரட்டிப்பாக்கப்பட்டு இருப்பதுமே இந்த இரத்த புற்று நோய்க்காண அடிப்படை காரணமாக அறியப்படுகிறது.

cancer பெயருக்கான காரணம் தெரியுமா?
ஏறத்தக்க மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்த்திய பெண் ஒருவரின் உடல் உறுப்பில் நண்டு வடிவத்தில் வளர்ந்திருந்த தசையைக்கண்டு பண்டைய மருத்துவர்கள் அன்று அதை நண்டு நோய் (cancer) என்னும் பெயரில் அழைத்தார்கள். அந்தப் பெயர் தான் இன்றும் வழக்கத்தில் இருக்கின்றது.

இரத்தப்புற்று நோய் பொதுவானதா?

ஒவ்வொரு இரத்தப்புற்று நோயாளிகளுக்கும் இருக்கும் வேறு பட்ட அமைப்பை வைத்து, இரத்தபுற்று நோய் நான்கு வடிவங்களில் வேறுபடுத்தபட்டுள்ளது.

1.) அக்யூட் லிம்ஃபோபிளாஸ்டிக் லுகேமியா (ALL – Acute Lymphoblastic Leukemia)
முதிர்ச்சி அடையாத ரத்த அணுக்களின் அபரிமித (வேக) வளர்ச்சியால் இந்த தீவிர இரத்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகின்றது.
பெரும்பாலும் மூளையை பாதிக்கும் இந்த நோய் பக்க விளைவுகளாக பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைவதுடன் நரம்பு மண்டலங்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

2.) அக்யூட் மைலாய்ட் லுகேமியா (AML – Acute Mmyeloid Leukemia)
இது எலும்பு மச்சையில் உள்ள ஸ்டெம் செல்கள், முதிராத அசாதாரண வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கின்றது.
இது பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்க கூடிய நோய்.
இது மருத்துவ கோட்பாடுகளின்படி, எந்த வயதினருக்கும் உண்டாகலாம். இந்த வித புற்றுநோய் தான் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நம் சகோதரி வித்தியா அல்வோன்ஸ்க்கு ஏற்பட்டுள்ளது.

3.) நாள்பட்ட மைலாய்டு லுகேமியா (CML – Chronic Myelogenous Leukemia )
மரபணுக்களிலுள்ள டி.என்.ஏ (DNA)களில் கோளாறு இருக்கும் பட்சத்தில், எலும்பு மச்சையில்ல் உள்ள ஸ்டெம் செல்கள், கட்டுப்பாடு இல்லாமல் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கின்றது. அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலை குலைத்து விடுகின்றது மற்றும் இரத்தத்தில் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்து விடுகின்றது.

4.) நாள்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா (CLL – Chronic Lymphocytic Leukemia)
இந்த வகை புற்றுநோய், பொதுவாக இருக்கும் நோய் எதிர்க்கும் சக்தியை குலைத்து மற்றும் சிகப்பணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்து விடும்.
நிணநீர், கல்லீரல் மற்றும் மண்ணீரல்களில் பி வடிநீர்ச்செல்கள் (B cells) என அழைக்கப்படும் ஒருவகை செல்கள் குவிந்து இருப்பதன் காரணமாக, உடல் எதிர்ப்பு சக்தியின்மையினால் உடல் பாதுகாப்பை இழந்து மற்ற நோய்களினால் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றது.
இரத்தப்புற்று நோய் ஏற்பட காரணங்கள்.

இரத்த புற்று நோய் ஏற்படுவதற்கு பின்வரும் காரணங்கள் பிரதானமானவையாக அறியப்பட்டுள்ளன.

1.கதிரியக்க, கதிர்வீச்சு மற்றும் எக்ஸ்ரே (X-ray) கதிர்கள் :
நோய்களை கண்டறிவதற்காக எடுக்கப்படு X-ray பரிசோதனைகள் உடலின் எலும்புவரை ஊடுருவி செல்லும் தன்மை வாய்ந்ததாதலால், கலங்களின் (Cell) அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இப் பாதிப்பு அசாதாரண வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

அஸ்பெஸ்டோஸ் (asbestos), என்றழைக்கப்படும் கட்டட சுவர்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் கல்நார்கள் என அடையாளப்படுத்தப்படும் இரசாயணங்கள் அன்றாட வாழ்வில் எம்மோடு கலப்பதனால் இரத்தப்புற்று நோய் ஏற்பட காரணமாக அமையும்.
2. புகைப்பிடிப்பு,

3. மதுபானங்கள்,

4. எர்பொருட்களிலும் கரைப்பான்களிலும் உள்ள பென்சீன் (benzene)

5. பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயணங்கள்,

6. உடல் சுரப்பி மாற்றங்கள்

7. அளவுக்கதிகமாக மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்

8. மற்றும் சில வகை வைரஸ் நோய்கள்
இரத்த புற்று நோய்க்காண தீர்வுகள் ?

லுகேமியா நோய்க்கான பொதுவான மருத்துவ தீர்வு முறைகளில் மிக முக்கியமானவையாக‌விளங்குபவை;
வேதிச்சிகிச்சை (கீமோதெரப்பியும் – Chemotherapy)

இவ்வகைச்சிகிச்சை அபரிமிதமாக வளர்ச்சையைக்காட்டு புற்று நோய் கலங்களை விசேட மருந்துகள் மூலம் அழிக்கும் செயற்பாடாகும். இரத்தப்புற்று நோய்க்கு மருந்துகள் மூலமாகவும், ஏனைய உறுப்பு புற்று நோய்களுக்கு இலத்திரன் எரிகருவி மூலமாகவும் இவ் வகை சிகிச்சை கையாளப்படும்.

இச்சிகிச்சையை ஒரு அளவிற்கு மேல் தொடரமுடியாது. காரணம், இவ் மருந்துகள் குறித்த எல்லைக்கு பின்னர் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகாத நல்ல கலங்களையும் அழிக்கத்தொடங்கிவிடும். அதுவே மரணத்திற்கு காரணமாக அமைந்துவிடக்கூடும்.

வேதிச்சிகிச்சை பல பக்க விளைவுகளை உண்டாக்கும். உடல்சோர்வு, குமட்டல், வாந்தி, முடி இழப்பு, மென்சவ்வு அழற்சி, ஆரோக்கியமான உடல் திசுக்களில் பாதிப்பு இதில் அடங்கி உள்ளது.

கீமோதெரப்பி ஒரு தற்காலிகமான தீர்வு தான். என்றாலும், இந்த நோய்க்கான மாற்று தீர்வு கிடைக்கும் வரை இது ஒரு சிறந்த சிகிச்சை. இதற்கான மாற்றுத் தீர்வு,எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை தான். இது ஓரளவுக்கு நிரந்தரமான தீர்வாகும்.
Bone marrow (எலும்பு மச்சை) மாற்றுச் சிகிச்சை

இவ்வகை சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வாக அமையும். புற்று நோய்க்குள்ளானவரின் மரபணுபுடன் ஒத்துப்போகும் இன்னொருவரின் stems cells (தண்டு கலங்கள்) உதவியுடன் பாதிக்கப்பட்டவரில் நோய் எதிர்ப்பு சக்தி கலங்களை உருவாக்கும் ஒருவகை சிகிச்சை முறையாகும்.
இவ்வகை சிகிச்சையை மேற்கொள்வதற்கு தண்டு கலங்கள் கொடுப்பவரின் DNA கள் 50% இற்கு மேல் அதாவது 70-80% வரை பாதிக்கப்பட்டவருடன் பொருந்தியிருப்பின் இவ் மச்சை மாற்று சிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.

இந்த 50% இற்கு மேல் என்பது மிக அரிதாக கிடைக்க கூடிய ஒரு நிகழ்வாகும்.
உதாரணமாக, குறித்த பாதிப்புக்குள்ளானவரின் தாய் தந்தையினர் கூட 50% ஆன DNA களையே பொதுவாக கொண்டிருப்பார்கள். (குழந்தை; தாயின் 23 chromosome ( நிறமூர்த்தங்கள்) களையும் தந்தையின் 23 நிறமூர்த்தங்களையும் கொண்டு உருவாவதால் 50% DNA கள் பொதுவாக பகிரப்படும்.)
உடன் பிறந்தவர்களும் இந்தவகையிலேயே சேர்வார்கள்.
ஆனால், குறித்த இனத்தில் எங்கோ ஒருவருக்கு பாதிப்புக்குள்ளானவரின் வரிசையிலேயே DNA கள் அமைந்திருக்க வாய்ப்புண்டு. (உதாரணமாக, புற்று நோய் பாதிப்புக்குள்ளான வித்தியா (2016) வின் DNA வரிசை அவரின் இனமான தெற்காசிய மக்களில் சிலருக்கு அமைந்திருக்க வாய்ப்புண்டு.)

இவ்வாறு பாதிப்புற்றவர்களுக்கு எப்படி உதவுவது?

முதலில் ஒவ்வொரு அரசினாலும் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்மை பதிந்துகொள்ளவேண்டும்.
பின்னர், அவர்களால் அனுப்பி வைக்கப்படும் ஒருதொகுப்பில் எமது எச்சியை பகிர்ந்து அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், எமது DNA தகவல்கள் சேகரிக்கப்பட்டு சர்வதேச மருத்துவ அமைப்புக்களில் பகிர்ந்து சேமிக்கப்படும்.
எப்போதாவது ஒரு நாள், குறித்த பாதிப்புக்குள்ளானர்வரின் DNA யிற்கு பொருத்தமானதாக எமது அமைப்பு அமைந்திருப்பின் குறித்த நபர் உயிர் வாழத்தேவையான மச்சை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறான அமைப்புக்களில் எமது தரவுகளை பகிர்ந்துவைப்பதன் மூலம், எங்கோ ஒருவரின் உயிரை நம்மால் பாதுகாக்க முடியும். மாற்றாக சிந்தித்தால், எங்கோ ஒருவர் இப்படி பகிர்வதால் நாளை எமது உயிரோ எம்மை சார்ந்தவர்களின் உயிரோ காப்பாற்றப்படும்.